Wednesday 1 May 2013

ஹைக்கூ ...

கண்ணே !
எனக்குள்ளும் உனக்குள்ளும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிரப்பமாய் பிரகாசமாய்
காதல், காதலாய் நிறைந்திருப்பதால்
கனகாலமாய், கடுங்கோபமாய்
கால்கடுக்க காலம் பார்த்து
காத்துகிடக்கின்றது மோதல் .....

 - மோதல் - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அறிமுகம் ஆகிய அன்றிலிருந்து இதோ இன்றுவரை
அளவிற்க்கென நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட
அதிக ஆனந்தத்துடன்அளவலாவிடும்  ஆசைக்கு கிட்டாத
அதிசய அதிர்ஷ்டம் ,உன் வீட்டு அடுப்பாங்கரையினில்
அமைந்திருக்கும் சமையல் அடுப்பிர்க்கும் ,இரவினில்
அனுதினமும் தூக்கத்தில்,தழுவலுடன்  உன்பிடியில் இருக்கும்
அந்த தலையணைக்கும்  மட்டும் ....

  - அணைப்பு  -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பொக்கிஷமாய் கருதி போற்றப்படும்
பொன்னும், பொருளும் , ஏன் பொற்குவியல்களும்
பெறாத அரும் பெரும் பேறு (பாக்கியம் ) உன்னால்
பயன்படுத்தப்படும் எல்லா பொருளுக்கும் .
பூவினமே நாணும் பூவான உன் ஸ்பரிசம் பெறுவதால் ....

     - ஸ்பரிசம் 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பல நூறு மைல்கள் அப்பால் நீ இருக்கின்றாய்
இருந்தும் ,அங்கிருந்தே என் இதயம் அதை
கூரிய உன் கூர் நினைவம்பினால் குறிபார்க்காமலே
 கீறியும்,குத்தியும் செல்லும் வில் வித்தையினை
மொத்தமாக எங்கு கற்றாய் என்பது தான்
இதோ இந்த நிமிடம் வரை வீற்றிக்குக்கும், விந்தை

  - விந்தை - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மலைமகள்  தன் மடிதவழவேண்டியவள்
மண்ணிலா என மனம் கசிந்து  வடித்திடும்
கண்ணீர் குவியல்கள்

 - அருவி -

உன்னோடு ஒப்பிடப்படவேண்டி மலைமகள்
கனகாலமாய் எடுத்துக்கொண்டிருக்கும்
குளியலின் சிதறல்கள்

 - அருவி -

குளித்து  முடித்ததும் கொண்டை அவிழ்த்து
வெயிலினில் உலர்ந்திட விட்டிருக்கும்
மலைமகளின் தண்ணீர் கூந்தலோ ??

 - அருவி -

வசீகரிக்கும் வரிகளால் உன்னை, வசம் வைத்திருக்கும்
எனக்கு போட்டியாய்,மலைமகள்
அனுப்பும் தண்ணீர் கவிதைகள் 

 - அருவி -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கண்ணே , நம் காவியக்காதலுக்கு
 நினைவுச்சின்னமாய்  இருந்திட கண்ணயராது
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை

 - கற்பனை  -

கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு

 - கற்பனை - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
 
பொதுவாக ஏதேதோ பெயர், பொருள் கொண்டாலும்
எனக்கென்னவோ ,உன்னால் ரசிக்கபடுவதனால் தான்
வான் நிலவு , தேன் நிலவாய் ....

 - தேன் நிலவு  -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உன்னோடு தொடர்பில் இல்லாத பொழுதுகளில்
என் மனதிற்க்கும், அவையங்களுக்கும் நான் சொல்லும் சமாதனம்  கண்டு
இதோ உலக சமாதானத்திற்கான விருதுப்பட்டியலில் என் பெயர்

  - சமாதானம் -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^6
விடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்
தளிரே ,உன் குளிர் நினைவின் துணைகொண்டே
தொடங்குகிறது "காதல் " தொடர்பயணமாய் ....

 - பயணம் -  
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறக்கம் என்பது இம்மி அளவும் இல்லாத இதயம் கொண்டவன் என்றும்
இடி இடித்தேனும் , வெடிவைத்தேனும் தகர்த்தாலாவது
போடியாலவேய்நும் இறக்கம் பிறக்காத என்பவளே , என்னவளே !

கடைசியாய் காலையில் பேசியபோதும் , அழைப்பை துண்டிக்கும்
அவசரத்திலும் அந்த கடைசி நொடியினில் வெளியான உன் சுவாசத்தில்
சிக்குண்டு சின்னாபின்னமாகி சிதைந்துப்போன  என் இதய துகள்களை கேள்
ஒவ்வொருதுகளும்  சொல்லும் உன் இனிமையையும் , தன் நிலைமையையும்

- இதய நிலை -  
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^66
 உன் மீதான உன்னதமான காதலினை
முதல் முதலாய்  நான் பகிர்ந்துகொண்ட
என் உயிருக்கு உயிரான உற்ற நண்பன்

   - காகிதம் -
 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^6
வறுமையின் சிறுமையினால் சிலசமயமும்
வேலைபளூவின் பளுவினால் பல பொழுதும் 
கடும் உணவுப்பசியை உணர்ந்ததுண்டு
இன்று உணவுப்பசியும், உணர்வே இல்லாமல்
உணர்வுப்பசியின் உள்ளிருப்பு போராட்டமோ ??
 
   

No comments:

Post a Comment