Monday 29 April 2013

காதல் கிறுக்கல்கள்..

தானே புயலுக்கே தளராமல் நடந்தவன்
தட்டுத்தடுமாறி தடம் தவருகின்றேன்
நீ ஆசுவாசப்படுகையில்
சிறுபுயலாய் வெளிப்படும் உன் சுவாசத்தில்

  உன் சுவாசத்தில்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
 
கார்த்திகை  மாத முதல் மழையின்
முதல் துளி  மண்மகளை தொட்டதும்
பட்டுமேனி சிலிர்க்க, சிலிர்த்து வெளிப்பட்ட
வெளிப்ப்பாடாய், வெளிப்படும் மனம்கவர்
மண்வாசனை விட மகத்தானது அடியே
எனை மயக்கும் உன்வாசனை ....

 மண்வாசனை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"எத்தனைக்கோடி இன்பம்வைத்தாய் இறைவா "
இறைநம்பிக்கை இல்லாதவரும் இசைந்து போகும்
இனிய தத்துவம் இது , காதலினால் .
ஆதலினால் காதல் செய்வோம் !!!!
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிரிக்கச்சிரிக்க பேசும் உன்னை - என்
வார்த்தை வசீகரத்தால் வசியப்படுத்தி 
எதிர் தாக்குதலுக்கு  தயாராகாது
தடுத்து வைத்திருக்கும் தருணங்களில்
எனை வீழ்த்திட நீ பயன்படுத்தும்
பிரம்ம அஸ்த்திரமோ, உன் மௌனம் ??

              மௌனம் 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
என்னவளே , கதகதப்பிர்க்காக என்னுள்
நீ கொளுத்திய சின்னஞ்சிறு தீ
இதோ, இன்று காட்டுத்தீயாய் ....

கவிதை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
மழையாய் , உன் கொஞ்சும் குரலின்
கொல்லும் நினைவுகள் பொழிய
மழைநீர் சேகரிக்கும் தொட்டியாய் ...
 
என் மனம்.......
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
காதல் உணர்வுபூர்வமானது என்பதை
உணர்த்திடத்தானோ ? அன்பே
இன்றுவரை நாம் சந்திக்காமலே .....
 
 
*******
தமிழ் அகராதியில் இனிமைக்கென
பொருளாய், புதியதாய் இணைக்கப்பட்ட
வார்த்தை ....
 
உன் குரல் ... 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றிலிருந்து இரண்டுநாட்கள் -என்
இதயம் வெறும் துடிக்கும் வேலை மட்டும் பார்க்கும்
இளைப்பாறுதலுக்காக சிறு இடைவேளையாய்-என்
இதயத்தின் இனிய உரிமையாளினி
இன்பச்சுற்றுலா சென்றிருக்கின்றாள்
இடம் -
 
 சொர்க்கம்  
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குவிழ்ந்த நிலையிலும் கூட
இரு   இதழ்கள்,
பாடும் ,இனிக்கும் சப்த ஸ்வரம் ...

முத்தம் 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
 
 சர்ச்சைக்குரிய சிரிப்பு ,சிலிர்ப்பு ,முக்கல்,முனகல்களே
சராசரி சப்தங்களாய் செவிமடுக்கும் பொழுது
சர்வ சாதாரணமாய் வெளிப்படும் உன் சின்னஞ்சிறு
குலுக் சிரிப்பு ,தும்மல்,முக்கல்,முனகல்,மட்டுமின்றி
ஆசுவாசபடுகையில் சிறு புயலாய் வெளிப்படும்  சுவாசமும்
உன் கெஞ்சல்களின் முடிவிடபட்ட முடிவுரையும்
என் கொஞ்சல்களின் முத்தாய்ப்பு முன்னுரையுமான
உன் வெள்ளி விசும்பல்கள் என சப்தங்கள்
அத்தனையும் எனக்கு ,மோகக்கூவல்களாய்
மாறி தோன்றிடும் மாயம் எங்கனம்

- மாயம் -
 

No comments:

Post a Comment