Wednesday 1 May 2013

காதல் கிறுக்கல்கள்...-1

என் தேவதை நீ அல்லவா ?
உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதைகள் எல்லாம் எல்லோராலும்
ரசிக்கபடுவதன் ரகசியம் சொல்கிறேன் , கேளடி கண்மணி !
என் ஒவ்வொரு கவிதையும் , ஒவ்வொரு வரிகளும்
ஒவ்வொரு வாக்கியமும்,.ஒவ்வொரு வார்த்தையும்,
ஏன் ஒவ்வொரு எழுத்தையும் , உயிர்க்கவிதையே !
உன்னைவிட அழகாய் படைக்க எண்ணி,
முனைந்தும் முடியாத தோல்வி கவிதைகளே !
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் மனதை மயக்கி மடக்கி வைத்திருக்கும்
    உன் மனம்கவர் மூக்கின் நுனியே ரசித்து எட்டி எட்டி பார்க்கும்
    இரு குட்டி திருக்குறள் உன் இதழ்கள்

    - இதழ்கள் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால்  மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு  சொல்லா?

இடை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொன் முத்து,பவளம் என மதிப்பினில்
பொலிவினில் உச்சமாய் இருப்பதை விட

உலகினிலி இதுவரை தோன்றிய வீரர்களின்
வீரத்தின் மிச்சமாய் இருப்பதை விட

தங்கம் கூட தரத்தினில் தோற்கும் ,தகதகக்கும்
அவள்தம் அங்கத்தின் அங்கமான
மச்சமாய் இருந்திட இச்சை எனக்கு ..

மச்சம்  
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

ஒரு முறையும் எனை தீண்டியதில்லை
ஒரு முறையும் தானும் தீண்டபட்டதில்லை
இருந்தும் , மனதால் ஒரு பெரும் ரகசியமஅறிவேன்
தரம் தனில் சிறந்த உன் கரம் அதன்
மென்மையில் முழுதாய் மயங்கி
மலர்களின் மொத்த இனமும் மடியேந்தும் ...

- கரம் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
முகம்பார்த்த மாத்திரமே  மனதோடு
முனுமுனுக்க துவங்கிவிட்டேன்
முத்து முத்தாய்  மலர்ந்திருக்கும் அந்த
 முகப்பருக்கள் மூன்றினை,  முறைத்தபடி
முத்தமிட கூடவும் முடியாத என்
முரட்டு இதழ்களுக்கு இல்லாத
முக்கியத்துவம், அதற்க்குமட்டுமா ??

 - முகப்பருக்கள் -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விரைவாய் வளர்ச்சியினை விரும்பும் வெகுவானோர் மத்தியில்
விதிவிலக்காய் ,வித்தியாசமாய் வாழ்நாள் முழுவதும்
மடியினிலும், மார்பினிலும் அன்பான அரவனைப்பினில்
இருந்திடவே விழைகின்றேன் என்றும்
என்றென்றும் என்னவளின் மழலையாய் ......

- மழலை 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
  என் மனதினில் உன் நினைவின் நிலைகள்
    ஆரம்ப நிலை ஆனந்தம்
    மத்திய நிலை அழகு
    ஆழ்நிலை பூரிப்பு
    இறுதி நிலை மட்டும் தவிப்பு

    - தவிப்பு -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
  பக்தருக்கு இறைவனின் திருத்தலம்
    பிள்ளைகளுக்கு தாயின் திருவடி
    பெற்றோருக்கு பேதையின் வாய்மொழி
    போகிகளுக்கு போதையின் பாதை
    பசித்தவனுக்கு சோறு கண்ட இடம்
    கனவு காண்பவர்க்கு எண்ண கனவு
    இளையாராஜாவுக்கு நம்ம ஊரு
    யார் யார்க்கு எவ்வெவ்விடமோ
    அன்றும் , இன்றும், என்றும்
    என்றென்றும் எனக்கு உன் மடி

    - சொர்கம் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
தேடிபார்கின்றேன் என் பெயரை நானும்
முதலிலோ,நடுவிலோ ,முடிவிலோ என
எங்கேனும் ஓர் இடம்  தியாகிகளின் பட்டியலில்
அறிமுகம் ஆனா நாளாய் பெரும்பாலும்
தூக்கம்,கனவு,நினைவு,பசி,உணவு,உறக்கம்
என ஒவ்வொன்றாய் உனக்காய் தியாகம் செய்ததால்

தியாகம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடலையும் கடந்திடும் அளவிற்கு கண்களில்
கடுமையான கண்ணீர் துளி சிந்திட தயார்

போதாதெனில், உடலின் ஒட்டுமொத்த உதிரத்தையும்
ஒரு சொட்டும் மீதமின்றி கொட்டிட தயார்

பகரமாய் ஏதும் பெரிதாய் வேண்டாம் ..

அவள்தம் பட்டுமேனியில் சொட்டு சொட்டாய் பூக்கும்
வியர்வைதுளியாய் வைத்திடும் வரம் வேண்டும்!

வரம் தருவீரா ? பல கடவுள்களில் எவரேனும் ??

-வியர்வைத்துளி-

காலவோட்டத்தில்  கிட்டத்தட்ட  வழக்கத்திலிருந்து 
நீங்கி விட்டது எண்ணற்ற தமிழ் வார்த்தைகள்
அழகாய் அழகை குறிக்கும் வார்த்தை என்பதனால்
அவ்வார்த்தை தழைக்க வேண்டுமென வந்தாயோ ?
எழிலாய் .....

எழில் 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால்  மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு  சொல்லா?

இடை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
வெட்டவெளியில் உனக்காக மாத்திரம்
கொட்டிகொண்டிருக்கும் (ஐஸ்) கட்டி மழையை
ஆரத்தழுவி தேகத்தோடும்
மனதோடும்  கட்டிக்கொள்ளாமல்
பாத்திரமாய் காத்திருக்கும்  சித்திரமே
பத்திரமாய் காத்திரு உன்னவனின்
காதலுக்காக ......

வாழ்த்து !

   
   
   

ஹைக்கூ ...

கண்ணே !
எனக்குள்ளும் உனக்குள்ளும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிரப்பமாய் பிரகாசமாய்
காதல், காதலாய் நிறைந்திருப்பதால்
கனகாலமாய், கடுங்கோபமாய்
கால்கடுக்க காலம் பார்த்து
காத்துகிடக்கின்றது மோதல் .....

 - மோதல் - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அறிமுகம் ஆகிய அன்றிலிருந்து இதோ இன்றுவரை
அளவிற்க்கென நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட
அதிக ஆனந்தத்துடன்அளவலாவிடும்  ஆசைக்கு கிட்டாத
அதிசய அதிர்ஷ்டம் ,உன் வீட்டு அடுப்பாங்கரையினில்
அமைந்திருக்கும் சமையல் அடுப்பிர்க்கும் ,இரவினில்
அனுதினமும் தூக்கத்தில்,தழுவலுடன்  உன்பிடியில் இருக்கும்
அந்த தலையணைக்கும்  மட்டும் ....

  - அணைப்பு  -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பொக்கிஷமாய் கருதி போற்றப்படும்
பொன்னும், பொருளும் , ஏன் பொற்குவியல்களும்
பெறாத அரும் பெரும் பேறு (பாக்கியம் ) உன்னால்
பயன்படுத்தப்படும் எல்லா பொருளுக்கும் .
பூவினமே நாணும் பூவான உன் ஸ்பரிசம் பெறுவதால் ....

     - ஸ்பரிசம் 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பல நூறு மைல்கள் அப்பால் நீ இருக்கின்றாய்
இருந்தும் ,அங்கிருந்தே என் இதயம் அதை
கூரிய உன் கூர் நினைவம்பினால் குறிபார்க்காமலே
 கீறியும்,குத்தியும் செல்லும் வில் வித்தையினை
மொத்தமாக எங்கு கற்றாய் என்பது தான்
இதோ இந்த நிமிடம் வரை வீற்றிக்குக்கும், விந்தை

  - விந்தை - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மலைமகள்  தன் மடிதவழவேண்டியவள்
மண்ணிலா என மனம் கசிந்து  வடித்திடும்
கண்ணீர் குவியல்கள்

 - அருவி -

உன்னோடு ஒப்பிடப்படவேண்டி மலைமகள்
கனகாலமாய் எடுத்துக்கொண்டிருக்கும்
குளியலின் சிதறல்கள்

 - அருவி -

குளித்து  முடித்ததும் கொண்டை அவிழ்த்து
வெயிலினில் உலர்ந்திட விட்டிருக்கும்
மலைமகளின் தண்ணீர் கூந்தலோ ??

 - அருவி -

வசீகரிக்கும் வரிகளால் உன்னை, வசம் வைத்திருக்கும்
எனக்கு போட்டியாய்,மலைமகள்
அனுப்பும் தண்ணீர் கவிதைகள் 

 - அருவி -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கண்ணே , நம் காவியக்காதலுக்கு
 நினைவுச்சின்னமாய்  இருந்திட கண்ணயராது
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை

 - கற்பனை  -

கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு

 - கற்பனை - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
 
பொதுவாக ஏதேதோ பெயர், பொருள் கொண்டாலும்
எனக்கென்னவோ ,உன்னால் ரசிக்கபடுவதனால் தான்
வான் நிலவு , தேன் நிலவாய் ....

 - தேன் நிலவு  -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உன்னோடு தொடர்பில் இல்லாத பொழுதுகளில்
என் மனதிற்க்கும், அவையங்களுக்கும் நான் சொல்லும் சமாதனம்  கண்டு
இதோ உலக சமாதானத்திற்கான விருதுப்பட்டியலில் என் பெயர்

  - சமாதானம் -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^6
விடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்
தளிரே ,உன் குளிர் நினைவின் துணைகொண்டே
தொடங்குகிறது "காதல் " தொடர்பயணமாய் ....

 - பயணம் -  
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறக்கம் என்பது இம்மி அளவும் இல்லாத இதயம் கொண்டவன் என்றும்
இடி இடித்தேனும் , வெடிவைத்தேனும் தகர்த்தாலாவது
போடியாலவேய்நும் இறக்கம் பிறக்காத என்பவளே , என்னவளே !

கடைசியாய் காலையில் பேசியபோதும் , அழைப்பை துண்டிக்கும்
அவசரத்திலும் அந்த கடைசி நொடியினில் வெளியான உன் சுவாசத்தில்
சிக்குண்டு சின்னாபின்னமாகி சிதைந்துப்போன  என் இதய துகள்களை கேள்
ஒவ்வொருதுகளும்  சொல்லும் உன் இனிமையையும் , தன் நிலைமையையும்

- இதய நிலை -  
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^66
 உன் மீதான உன்னதமான காதலினை
முதல் முதலாய்  நான் பகிர்ந்துகொண்ட
என் உயிருக்கு உயிரான உற்ற நண்பன்

   - காகிதம் -
 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^6
வறுமையின் சிறுமையினால் சிலசமயமும்
வேலைபளூவின் பளுவினால் பல பொழுதும் 
கடும் உணவுப்பசியை உணர்ந்ததுண்டு
இன்று உணவுப்பசியும், உணர்வே இல்லாமல்
உணர்வுப்பசியின் உள்ளிருப்பு போராட்டமோ ??
 
   

Monday 29 April 2013

கைப்பேசி

காலகாலமாய் என் கனவுபகுதியினில் அடிக்கடி
குடியிருந்ததை  அறிந்ததும் நான் கொண்ட
வயிற்றெரிச்சலின் வெளிப்பாட்டினால் தொலைந்ததோ ...

  - கைப்பேசி -


கடவுளையும் கடவுளின் படைப்பான மனதனையும் கூட
கைகள் கூப்பி கும்பிடாதவன் உன்னால்  கைகூப்பி
கும்பிடுகின்றேன்  மனிதனின் படைப்பான கைப்பேசியை ...

  - கைப்பேசி -

காலம் -

ஆசை என் ஆசையும் ஒர் நாள்  நிறைவேறும்
எனும் நம்பிக்கை விதைக்கு தண்ணீர் பாய்ச்சுவது
நம் காதலுக்கு அடுத்தபடியாய் காலம் தான்

 - காலம் -


 என் காதலும் ஒர் நாள் கைகூடும்
எனும் நம்பிக்கை மழையினை இந்நாள்வரை
எனக்காய் தூவிடும் ஒரே நண்பன் 

  - காலம் -

உருக்கம்

ஊருக்கு  ஒளிகொடுக்க
தன்னை தீயிட்டுக்கொண்ட மெழுகுவர்த்தி

ஆதவன் அவன் தன் அனல்தகிக்கும்
ஆதங்க பார்வைப்பட்ட பனிப்பாறை 

அடியில் அக்கினி தீமூட்டி பின்
பயன்பாட்டிற்க்கு எடுக்கப்படும்  தார்

தொழிற்ச்சாலையினில் புதியதாய்
பரிணாம பிறப்பெடுக்கும்  இரும்பு

இவை அனைத்தும்  அச்சச்சோ என
பரிதாபத்துடனும் ,ஏக்கத்துடனும்  பார்கின்றது

அனுதினமும் அழகான   உன் நினைவால்
அணுவணுவாய் உருகிடும்

இந்த அப்பாவி ஆசையின்  மனதை  கண்டு ...

   - உருக்கம் -

நான் பொல்லாதவன் ..

நேற்றிரவு கொடுங்கோவத்தில்,ஒரு கடுங்கலவரம்
அடித்து,உதைத்து,குத்தி,கிழித்து
பஞ்சு பஞ்சாக்கிவிட்டேன்,
நிதமும் நெஞ்சணைத்து நீ தூங்கும்
தலையணையை
என்  கனவினில் ..........
 
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((9
முரண்பாட்டு மூட்டை.....
 
முகமறிந்த, அறியா, பெரியவர்,சிறியவரென  பாகுபாடின்றி
பாசமாய், நீங்க,வாங்க,போங்க என்றழைத்து
என்னைமட்டும்  நீ, வாடா,போடா, எனும் அவள் ....


முரண்பாட்டு மூட்டை ...
 

காதல் கிறுக்கல்கள்..

தானே புயலுக்கே தளராமல் நடந்தவன்
தட்டுத்தடுமாறி தடம் தவருகின்றேன்
நீ ஆசுவாசப்படுகையில்
சிறுபுயலாய் வெளிப்படும் உன் சுவாசத்தில்

  உன் சுவாசத்தில்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
 
கார்த்திகை  மாத முதல் மழையின்
முதல் துளி  மண்மகளை தொட்டதும்
பட்டுமேனி சிலிர்க்க, சிலிர்த்து வெளிப்பட்ட
வெளிப்ப்பாடாய், வெளிப்படும் மனம்கவர்
மண்வாசனை விட மகத்தானது அடியே
எனை மயக்கும் உன்வாசனை ....

 மண்வாசனை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"எத்தனைக்கோடி இன்பம்வைத்தாய் இறைவா "
இறைநம்பிக்கை இல்லாதவரும் இசைந்து போகும்
இனிய தத்துவம் இது , காதலினால் .
ஆதலினால் காதல் செய்வோம் !!!!
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிரிக்கச்சிரிக்க பேசும் உன்னை - என்
வார்த்தை வசீகரத்தால் வசியப்படுத்தி 
எதிர் தாக்குதலுக்கு  தயாராகாது
தடுத்து வைத்திருக்கும் தருணங்களில்
எனை வீழ்த்திட நீ பயன்படுத்தும்
பிரம்ம அஸ்த்திரமோ, உன் மௌனம் ??

              மௌனம் 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
என்னவளே , கதகதப்பிர்க்காக என்னுள்
நீ கொளுத்திய சின்னஞ்சிறு தீ
இதோ, இன்று காட்டுத்தீயாய் ....

கவிதை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
மழையாய் , உன் கொஞ்சும் குரலின்
கொல்லும் நினைவுகள் பொழிய
மழைநீர் சேகரிக்கும் தொட்டியாய் ...
 
என் மனம்.......
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
காதல் உணர்வுபூர்வமானது என்பதை
உணர்த்திடத்தானோ ? அன்பே
இன்றுவரை நாம் சந்திக்காமலே .....
 
 
*******
தமிழ் அகராதியில் இனிமைக்கென
பொருளாய், புதியதாய் இணைக்கப்பட்ட
வார்த்தை ....
 
உன் குரல் ... 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றிலிருந்து இரண்டுநாட்கள் -என்
இதயம் வெறும் துடிக்கும் வேலை மட்டும் பார்க்கும்
இளைப்பாறுதலுக்காக சிறு இடைவேளையாய்-என்
இதயத்தின் இனிய உரிமையாளினி
இன்பச்சுற்றுலா சென்றிருக்கின்றாள்
இடம் -
 
 சொர்க்கம்  
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குவிழ்ந்த நிலையிலும் கூட
இரு   இதழ்கள்,
பாடும் ,இனிக்கும் சப்த ஸ்வரம் ...

முத்தம் 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
 
 சர்ச்சைக்குரிய சிரிப்பு ,சிலிர்ப்பு ,முக்கல்,முனகல்களே
சராசரி சப்தங்களாய் செவிமடுக்கும் பொழுது
சர்வ சாதாரணமாய் வெளிப்படும் உன் சின்னஞ்சிறு
குலுக் சிரிப்பு ,தும்மல்,முக்கல்,முனகல்,மட்டுமின்றி
ஆசுவாசபடுகையில் சிறு புயலாய் வெளிப்படும்  சுவாசமும்
உன் கெஞ்சல்களின் முடிவிடபட்ட முடிவுரையும்
என் கொஞ்சல்களின் முத்தாய்ப்பு முன்னுரையுமான
உன் வெள்ளி விசும்பல்கள் என சப்தங்கள்
அத்தனையும் எனக்கு ,மோகக்கூவல்களாய்
மாறி தோன்றிடும் மாயம் எங்கனம்

- மாயம் -
 

முத்தமழை அதற்காக ....

மழையின் அழகினில் உருகியே மருகிய
மிகப்பெரும் ரசிகன் நான் முன்பு

இன்றோ மூன்றாண்டு காலமாய் மழையினை
மட்டுமின்றி, மழையின் துளியினையும்

தீவிரமாய் தவிர்த்து வருகின்றேன் தீர்க்கமாய்
மணக்கும் உன் அறிமுகத்திற்கு பிறகு

தப்பித்தவறி தீண்டிடும் தீந்துளிகள் கூட
தேகம் தகிக்கும் தீத்துளியாய்

அதனால்தானோ,? சிலக்காலமாய் சரிவர
மழையும் இறங்குதில்லை மண்ணில் ??

சோக மழைக்காக வக்காலத்து வாங்கிட
வானவில் வந்திருந்தது விண்ணில்

முன்னால் மழை பிரியரே , ஒரு வினாவுக்கு விளக்கம் தெரிவிப்பீரா ??
இத்திடீர் தீண்டாமை தீர்மானம் வான்மழைக்கு எதற்க்காக ??

மழையினும் குளிரான மலர்மகள்,அவளின்,முதல்சந்திப்பின்பொழுது
மொத்தமாய் பொழியவிருக்கும் முத்தமழை அதற்காக .....

காதல் முல்லைகள் iii

என் நினைவின் நதியினில் நிம்மதியாய்
நெடுந்தூர பயணத்தில் நீ

உனை அவ்வப்போது கரைக்கு அழித்துவிடுகின்றேன்
என் கவிதை ஆலயத்திற்குள் உன் தடம் பதிக்க

லைலாவின் பித்துபிடித்து(காதல்) புலம்பும்
பைத்தியக்காரன் , மஜ்னூவை போல


எத்தனைமுறை அழைத்தாலும் துரிதமாய் வந்துவிடுவாய்
நீ என்ன இரக்கத்தின் சுரங்கமா?

ஒவ்வொரு முறையும் தேவதை உன் துணையோடு
இந்த கிறுக்கனின் கரிக்கோலிளிருந்தும்
கொள்ளை எழில் கொஞ்சும் கவிக்கிள்ளைகள் பிறக்கும் 

ஒவ்வொரு கவிதைக்கும் தத்தம் தன்மையினை
கருத்தில் கொண்டு தலைப்புகள் இட்டாலும்
மொத்தத்தில் அவை  அத்தனையும்
உனக்காக நான் தொடுக்கின்ற காதல் முல்லைகள் 

                  காதல் முல்லைகள் 

என்னவளே உனக்காக !!

அழகே அழகே 
உலகின் மிக அழகானவற்றிர்க்கோர்
போட்டி வைத்தால்
முதலாய் வரும் முதன் முதலே !

முழு பிரபஞ்சத்தினிலும்
அழகு நிலவு மகளவள்
தன் விருப்ப  நிலைநிலமாய்
இருக்க விரும்புவது  உன் நுதலே !

ஆசை என்றால் ஆசையே அற்று
வாழவேண்டி பற்றுகொண்ட
புத்தனுக்கே லேசான ஆசை எனும்போது
ஆசை மீது, உனக்கும்  கொள்ளை ஆசைதானே ?

நான் வரி பதிக்கும் போது நீ
பதிப்பதில்லை ஏதும் பதிப்பை
பதிக்கதபோது பதிப்பாய்
சூட்சுமமாய் , உன் மதி பதிப்பை

பதிப்பபை ,நீ பதித்த மறுகணமே
படித்து நானறிவேன் ,
மணக்கும் மலர் உன்  மனதின்
மதிமயக்கும் வாசத்தின் மதிப்பை,

ரத்தினமே , முத்தினமே , சித்திரமே
இன்னும் எத்தனை நாள்
உன் மனதை பொத்திவைப்பாய்  ?

ஆசையின் மீதான உன் ஆசை அதை
இன்னும் எத்தனை நாள்
என்னிடம் சொல்வதை  ஒத்திவைப்பாய் ?

என்னவளே உன் மனதை எனதோடு
இணையாக என்றும் சேர்த்திருப்பேன்

நான் பதிக்கும் பதிப்புகளின் முழுமதிப்பே !
துணையாக என்றும் காத்திருப்பேன்



       என்னவளே உனக்காக !!

காதல் சொல்ல ...

ஒரு வயது குழந்தைக்கு கூட
தன் காதலை சொல்ல
எத்தனை எத்தனை வசதிகள்
சிரிப்பாய் , மந்திரபுன்னகையாய்
மழலை மொழியின் உளறல்களாய்
விசும்பலாய் , அழுகையாய்
சம்பாஷனைகளாய் , ஸ்பரிசங்களாய்

காலகாலமாய் காதலையே
வாசித்து, அரும் சுவாசக்காற்றாய்
சுவாசித்து வரும் எனக்கோ
கவிதைகளாய் மட்டும் .....


     காதல் சொல்ல ....

இருளாத பகல் வேண்டுகிறேன்....

அழியாத நினைவுகளை
கொஞ்சும் மொழியாலே தந்தவளே !

வடியாத மலரில் இருந்து கூட
தேன் வடியும், உன் இனிமை உணர்ந்துவிட்டால்

விடியாத இரவை வேண்டும் பல
காதலர்களுக்கு மத்தியில்

இருளவே இருளாத பகல் வேண்டுகிறேன்
உன்  இனிமை நினைவுகளோடு தொடர்ந்திட .....

கயவர்களால் தானோ ??

தீதென்பார் உன்னை, தீதிர்க்கே தீதானவர்

தீதென்று எனைக்கூற, காரணம் யாதென்பாய் ?

தீதனே தான் நீ  என்று முத்திரையிடுவார்

மிகப்பெரியவர் போல் முகத்திரை அணிந்த

மகாபுருஷ ஆதிமடையர்கள்

கடவுள் அவன் ,கல்லாய் போனது - மனம்

கல்லாய் போன இக்கயவர்களால் தானோ ??


   கயவர்களால் தானோ ??

சில கிறுக்கல்கள் ...


உலகின் மிக  விலையுர்ந்த துணி
ஏதென்று  அறிவீரா  அறிவோரே ??

அவள் உதடுகளை ஒட்டாத
என் உதடுகளுக்கு  கிட்டாத
அரும்பெரும்  பாக்கியமாய்
அவ்வப்போது, ஒத்தி ஒத்தி
ஒத்தடம்  கொடுத்திடும்
ஒற்றைத்துணி
கைக்குட்டையே

கைக்குட்டையே 
 
#############################################################
அளவினில் ஆறடியினை கடந்துவிட்ட
அசுரவளர்ச்சி கொண்ட
அரும்பெரும் உருவங்களிர்க்கே
அசராத என் மனம்

அங்குலம் ஐந்தும் அடையாத
அவள்தம் சின்னஞ்சிறு
அழகு நாசியினை நினைந்து
அரண்டுபோகின்றது !

   அதிசயம் ..
################################################################
மரங்களின் மெல்லிய வளர்ச்சி
மலர்களின் மயக்கும் மலர்ச்சி
பூமியின் அன்றாட சுழற்சி
கண்களால் காணாத போதும்
இவை அனைத்தும் மானசீகமே
என் மனம் நிறைந்தவேளே
உன்னை போல் ....

    உன்னை போல்
################################################################

அவள் நினைவுகளுக்கு நீள் தடை
நிச்சயமென தெரிந்தே, தினமும்
நான் புரியும் தற்காலிக தற்கொலை

   தூக்கம்
###########################################################
கொஞ்சும் நினைவதை
கொஞ்சமே கொஞ்சம் கொடுத்து
கொள்ளை கவிதைகளை வட்டியாய்
கொள்ளை கொள்ளும் கந்துவட்டிக்காரி நீ ....

கந்துவட்டிக்காரி நீ.....
##############################################################
சாதியொழிப்பின் தீவிர செயலாளர் நான், இன்றோ
சாதி ஒழிப்பிற்கு தீவிர எதிர்ப்பாளர்
சாதி மல்லி என்றால் அவளுக்கு தீவிர பிரியமாம்

அவளுக்காக...
###########################################################
 
  எத்தனை எத்தனை  நாட்களாய்
எத்தனை எத்தனை  லட்ச கவிதைகள்
எழுதி எழுதி , கிழித்து கிழித்து
என் வீடே , குப்பை மேடானது தான் மீதம்
உன் போல அழகிய கவிதை எழுதிட முடியவில்லை ...

அழகே ! அழகின் அழகே !!

ஒரே முறை என் கண்முன் தோன்றிடு !
கண்களால் உன்னை நகல் எடுத்துகொண்டு
மீண்டும் முயற்சிப்பேன் , மனம் தளரா
முழு முயற்சியோடு !!!

  முயற்சி 
#######################################################
 
  
செல்வத்தை தவிர்த்து , எல்லா வளங்களையும்
வேண்டிய அளவிற்க்கு வாரி வழங்க
வேண்டி விழைந்தேன் ,
எல்லாம் வல்ல இறைவனை ,
வேண்டியதை, வேண்டியபடிவழங்கினான்
உன்னை விடுத்து - ஒருவேளை
உலகின் உயர்செல்வங்களை விட விலயுயர்ந்த
உயிர்ச்செல்ல்வம்  நீ எனும்
உண்மை உணர்ந்ததாலோ ??

உயிர்ச்செல்ல்வம்  நீ....
 

Sunday 28 April 2013

தனியார்மயம் ...

வீடில்லா மக்கள் 35 % தாண்டிய
ஈடில்லா நாடு நம் இந்திய ..
மக்களின் ஊழியர்தம்  , மனதினில்
ஊறிய ஊழலினை ஒடுக்கிட
ஓயாமல் உண்ணாவிரதமிருப்பவர்
ஒருபுறம் தடுத்திட , அவரோ
ஊழலின் உக்தியை துரிதமாய்  முடுக்கிட 
திடுக்கென அடிக்கடி எடுத்திடும்
தற்காலிக திசைதிருப்பலே .

தனியார்மயம் ....
===========================================================

ஊடகத்தின் மானக்கேடு

"சகானா கர்ப்பம்,
 யார் காரணம் "
நாட்டில் பெயர்போன
நாளேடு ஒன்றின்
தலையங்கம் இது

படித்ததும் அப்படியே
வாய் பிளந்துவிட்டேன்

"நாளேட்டால்  உயரும் நாடு  "
எனும் தலைப்பினில்
ஆண்டுவிழாவில் பேசும்
வாய்ப்பை இழந்து விட்டேன் .

வரமே எனக்கு சாபமானதால் ....

வேற்றார்தம் விருப்பம் போல - என்
வார்த்தை வரம், அவளை விடுத்து நான்
வரிவரைய விழைந்ததன், விளைவரிவீரோ  ??

வார்த்தை தேசமதை விட்டு - வெளியே
வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்டு
வார்த்தை வரட்சியினில்,வரண்டு விரிந்த

வெட்டவெளியினில் கட்டிவைத்ததுபோன்ற
விகார  வலிகொண்டதை என் சொல்ல ?
வேற்றார்தம்  விருப்பம் வெற்றிபெற
வம்சாவழியாய், பிள்ளை வளம் இல்லாதவர்
வீட்டில், இட்டிருக்கும் தொட்டில் போல
வார்த்தை குழந்தைகள், விளையாடா குறிப்பேடு
இருந்தும் அரைவிருப்பதொடு - வரிகள்
பதிக்கின்றேன் , செயற்கை கருவுற்றாவது
வரமே  எனக்கு சாபமானதால்  .......

சுவரில்லா சித்திரங்களாய் ...
சுவையில்லா சக்கரையாய் ....
அழகில்லா இயற்கையாய்  .....
அளவில்லா அளவுக்கோலாய் .....
தேனில்லா தேன்கூடாய் ............
விழிகளில்லா பார்வையாய் ......
வாசமில்லா மலர்களாய் .....
அவளில்லா என் வரிகள் .

வரமே எனக்கு சாபமானதால் ........

நிலவே !..

வெள்ளிமலரே !
வெள்ளைவரமே !
பிள்ளைமுகமே !
கொள்ளையழகே !

வானத்தின்,  வனப்பிர்க்கும் ,
வசந்தத்திர்க்கும், வசீகரத்திர்க்கும்
பெரும்பான்மை வளம்தன்னை
வசம் கொண்டு வலம் வரும்
வசீகரமே !!

என்னவளின்  பொன்முகத்தினை
மாதிரிவடிவாய் கொண்டு
உன்முகம் அதை , வரமாய்
வாங்கிய உச்சத்தவமே !

 ஒர்நிலையில்
தேய்பிறையாய் தேய்ந்து ,
வளர்பிறையாய் வளர்ந்து ,
முழுநிலவாய் மாறி
பௌர்ணமியாய் ஒளிர்பவளே !

உன் கவர்ச்சிக்குளிர்
கொண்டு, என்னையும்
கூர்ந்து கவர்ந்துவிட்டாய் 
மற்றவரை போல் ..

நானும் உன் ரசிகன்தான்
ஆயினும் ,
உன் பன்நிலைகளில்
நான் விருபுவது
அமாவாசையை தான்

அறிந்ததும் அப்படியே
அதிர்ந்திருப்பாயே ?
ஆம் , அமாவாசை
அன்றுதான் நான்
அவள் எழில் மனதினில்
முழு நினைவாய்
நிறைந்திருப்பேன் ...

எனக்கிணையாக அவள்
நேசிப்பது
உனை என்பதால் ...

" காதல் வேள்வி


    காதலன் - காதலில், உனக்காக காத்திருப்பேன் நான் அன்பே !

    காதலி - காதல் இல்(லை) எனினும் உனக்காக காத்திருப்பேன் அன்பே !.

    காதலன் - கண்ணிமையே, உன் கண்களுக்கு கவிகூட்டுதேன்றேன் , கவியில்

    காதலி - கண் ணின் மையே,காதல உன் கவி வரிகளுக்கு காரணம், வேறில்லை.


    காதலன் - வரந்தருவேன் வா , என்போல் ஓர் உயிரினை உனக்கு, பெரும் வரமாய்

    காதலி - வர தருவேன் வா , எண்ணம்போல் எனையே உனக்கு அரும் வரமாய் .

    காதலன் - நீரில்லா மீன்போல துடித்தேன் தினம் நான் அங்கு

    காதலி -நீர் இல்லா என்னிலையும் அஃதே தான் இங்கு, மாற்றமில்லை .

    காதலன் - சரித்திரம் போற்றசெய்வேன் , அன்பே நம் காதலினை காவியமாய்
    காதலி - சரி திறம் அறிந்தே கண்ணா, நம் காதலை மனதினில் பதித்திருக்கின்றேன் ஓவியமாய் .

    காதலன் -நீர்நிலையாய் நான் இருப்பேன் , நீ குளிர என் நெஞ்சம் நிறைந்த அஞ்சுகமே !

    காதலி நீர் நிலையாய் இருக்க , எனை என்ன செய்யும் எவர் வஞ்சகமே ?.

    காதலன் - தாமரை விழிகொண்டவளே ! உன் வர்ப்பார்வை தருவாயா ?
    காதலி - தா மரையின் விழியாள் தான், ஆனால் தாவுகின்ற மானல்ல உன் மடிதவழும்
    சிறு மான் நான், பார்வை வரம் கோருகிறாய்,எனையே அரும் வரமாய் தரத்தயார்
    பெருவாயா?

    காதலன் - தலைப்பு ஒன்று தெரிவிப்பாய ? இப்பதிப்பும் நல் மதிப்பை பெருவதற்க்கு !

    காதலி - தலை பூவை தந்தவனே , தருகின்றேன் தருகின்றேன் , கடுகளவும்     
    காதலில்லா வரிகளுக்கே இடும்பொழுது, இப்பதிப்பிர்க்கு என்ன குறை                "                           "    "காதல் வேள்வி " எனதலைப்பு இடுவதற்க்கு ??
   

பதிப்பின் படைப்பு ...!!!

நேற்றும், வழக்கம் போல
நள்ளிரவின் 2 மணிவரையில்
உனக்காகத்தான் விழித்திருந்தேன் !
அடியே தூக்கத்தினை  களவாடிடும்
தூக்க களவானியே !

என் தூக்கத்தினை , தூக்கிசென்ற
உன்னை ஒருவழியாய் சமாளித்து
சமாதானம்செய்துவிட்டு
தூங்கிட சென்றால், தன்
நேரம் தவறாமைக்கென
ஓர் நேரம்காலமே  இல்லாத
விடியல், வெகு விரைவில்

விழிகள்திறந்து விழித்துவிட்டால்
மீண்டும் தூக்கம் என்பது
என்னிடமிருந்து அவ்வப்போது
தவனைமுறையினில் நீ
வாங்கிடமுனையும் முத்தத்தினை போல
மிக மிக கடினம் ..

தூக்கம் கலைந்ததும் வேறென்னவழி
ஸ்ரீராமஜெயம் எழுதிடும்
ஸ்ரீ ராம பக்தனை போல
நினைவினில் உன்னை ஓடவிட்டு
எழுதுகோலினை காகிதத்தில் ஓடவிட்டேன்
ஓடி ஓடி ஒருவழியாய் இதோ
இப்பதிப்போடு இணைப்பை இரண்டு
பதிப்பினை முடித்து , ஓய்வெடுத்துக்கொண்டன
எழுதுகோலும் , உன் நினைவும் .....

பதிப்பின் படைப்பு  

ஹைக்கூ -2


எச்சரிக்கை ...
காய்ச்சலே காய்ச்சலே
மொட்டு மலரவள்  பட்டு மேனியை
விட்டுவிட்டு வெளியேறிவிடு
அழகு ரதியவள் ஆதரவு இருந்ததனால்
இத்தனை நாள் உன்னை விட்டிருந்தேன்
இதோ, இன்றுதான் உனக்கு கடைசி கெடு
இல்லாவிடில் , தகிக்கும் கத்திரி சூரியனில்
உன்னை படுத்தி காய்த்து எடுத்திடுவேன்
துரிதமாய் கிளம்பிடு 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
சுவடுகள்...
தென்றலை போல் , நறுமணம் போல்
மழையினை போல் - நீ, திடுக்கென
தோன்றி திடுக்கென மறைந்தாலும்
குளிரை போல் ,வாசத்தை போல்
இலைசிந்தும் மழைத்துளிகளை போல்
ஒரு பொழுதும் ,விட்டு செல்ல மறப்பதில்லை
உன் இனிமை நினைவுகளை
சுவடுகளாய் 
  
படபடப்பு...
தேர்வறைக்குள் நுழைவதர்க்கான
கடைசி சில நிமிட துளிகளில்
படபடப்ப்பு , அவசர அவசரமாய்
புரட்டிப்பார்க்கும், புத்தகத்தை போல்
புரட்டிப்பார்கின்றேன் என் கவிதை
வலைபக்கங்களை, வந்திருக்காதா
உன் பதில்கள் என ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
அன்புப்பார்வை  
நனைகிறதே, உயிரின்   வேர்கள்
அன்புடன்,அன்பாய் பொழிந்திடும்
அன்பின் கன மழையினில்

திடும்மென்றே தோன்றிடும்,சிலரின்
கொடுங்கருத்துக்களை  கடுகளவும் மதியா
அன்பர்கள்தம் அன்புப்பார்வையினில்...

 
   

என் கவிதை அனுபவம்...

அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
பருகியப்பின் அதனால் நாம்பெறும்
குணநலன் அது பன்மடங்கு பெருகுவதை போல்

கவிதை என்பது படைக்கும் வரை
கடினங்களிலேயே மிக கடினம்
படி சிரத்தைக்கு பிறகு படித்துவிட்டால் - பின்
பெறுகின்ற பரவசமோ பழரசம் போல்

என் கவிதை அனுபவம்.

குழந்தைகள்...

அவளின் மனமதை முழுமையாய்
அப்படியே ஆக்கிரமிக்க அனுமதிக்காமல்
அன்றிலிருந்து இதோ இன்றுவரை
அலைக்கழிக்கும் நெருக்கடியினை
அவ்வபோது எனக்களிக்கும்
அழகான போட்டியாளர்கள்

குழந்தைகள்...
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஏமாற்றம்.....
 
 சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட
அந்த குறிப்பிட்ட கணத்தை எண்ணி
கடலை விட அதிகமாய் ஆர்பரிக்குமோர்
கடலோர குடிசைவாழ் மீனவனின் மனதினை போல்
கடைசிநாள், கடைசி நிமிடம்வரை காத்திருந்தேன்
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு
ஒரு தங்கமாவது கிடைக்குமென .....

ஏமாற்றம்

மழை ......

உன்னை முத்தமிட்டிடும்
திட்டத்துடனே தான்
சிறு,சத்தத்துடன் துவங்கி
பெரும் சத்தத்துடன் முழங்கி
தன் இனம் மொத்தத்துடன்
மண் இறங்குகின்றதோ ??
மழை .......
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தண்ணீர் சிக்கனம் !
 
 நாளொன்றிற்கு இரண்டு முறை வீதம்
குளித்து வந்தவன் - இன்றோ
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
வீதம் குளிக்கின்றேன்

மற்ற நேரங்களில், ஒற்றை ஒற்றையாய்
வரும், அவள் நினைவுகள்
அந்த நேரத்தில் மட்டும்
குபீரென கூட்டமாய் வந்துவிடுவதால் 

நீ ..... நான் ...

உலகின் பரிதாபத்திற்குரிய காதலனின்  பட்டியலின்
முதல் மூன்றில்   நான் ...
 
 நான் ...
 
############################################################# 
 
 உலகின் உயர் இனிமைகளில்
மிக உயர்வான இனிமை   நீ ....
 
 நீ .....
 

வா நீயும் வா .!

என் நினைவுகளுக்கு மட்டுமே
இத்தனை வரிகளா ? என
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
என் செல்லமே !
நீ இல்லாத பொழுதுகளில்
என்னை சுவாசிக்க வைப்பதே
உன் நினைவுகள் தான் .

வா, நீயும் வா !
வசந்தமான உன் வாசம் அதை
என் வசம் தா !

ஒரு சிலமணிநேர
சுவாசம் தந்தால்
ஓராயிரம் கவிதைகள்  உனக்கும் உண்டு

வா நீயும் வா .! 

கேளிக்கைக்காக ....

போலியான
கதைபுனைந்து
பற்பல
பெண்பூக்களினை
நெருக்க
தொடர்புடைய
தோழிகளாய் பாவித்து
உன்னோடு 
உரையாடும் (உறவாடும்)
தருணங்களில்
மறவாது எடுத்துரைப்பேன்,
அழகொழுகும்
தேவதை நீ
ஆத்திரத்தின் மாத்திரத்தில்
கேலியது
என மறந்து
தற்காலிக காளியாக
சீரிஎழுவதை
கேளிக்கையாய்
காண்பதற்க்கு.

உன்னாலே உன்னாலே ..

தன்னைவிட எழில்நிறைந்த
உயர் கவிக்காக
ஓர் உயிர் கவிக்காக
சரமாக்கபடுவதை எண்ணி
சிலகாலமாய்
தாழ்வுமனப்பான்மையில்
தவித்து வந்த
என் கவிதைகள்


தினம் தினம் தவறாது
கவிதைகளை  நீ
தரிசிப்பதாலும்
வாசித்து ரசிப்பதனாலும்

இப்பொழுதெல்லாம்
கடும் தலைக்கனத்துடன்
திரிகின்றன ...

பதிலே வரமாய் !


கவிதை காதலியே !

நெடுநாட்களாய்
உன் பதிலை ,வரமாய் பெறவே
தவமாய் தவமிருக்கும்
கேள்வி  ஒன்றுண்டு

இதோ
கவிதையின் காதலினால்
என்னை காதலிக்க துவங்கினாயா?

என் காதலினால்
கவிதையை காதலிக்க துவங்கினாயா ?

இல்லாது போமோ இரக்கம் ??

மௌனத்தை மௌனிப்பவன் நான்
உன் மௌனத்தையும்
மௌனமாய் ரசித்தவன் தான்
இன்று ஏனோ ?
உன் மௌனம்
எனக்குள் தீமூட்ட தொடங்கியது ??
வாய் வார்த்தை வேண்டி, 
வாசகம் கூட அனுப்பாதவன்
உன் மெளனத்திற்க்கு,
வகைவகையாய்
வார்த்தையிட்டும்,
வாக்கியமிட்டும் 
வாயார வாசிக்கின்றேன் ,
வாசித்து
உன் வசீகரக்குரலின் இனிமையது
அப்படி எப்படி இருக்குமென
மனதோடு யோசிக்கின்றேன் ?
ஆளான நாள் முதலாய்,
அவளழகை
அணைத்தபடி மறைத்துவரும்
ஆடைக்கே,
அவ்வப்போது  இறக்கம் உண்டு
இந்த ஆசைக்கு
இல்லாமலா  போகும் இரக்கம் ?

உன்னில் எனை கவர்ந்தது யாது ?

உன்னில் எனை கவர்ந்தது யாது ?

ஈதறிய தோதானவர்
எனையன்றி வேறார் ?
ஆதலால், இதோ
நானே சிறப்பு நடுவராய் வீற்று
நின் சிறப்பம்சங்களை
தேர்ந்தெடுத்திட ஒன்றொன்றாய்
சீர்படுத்திடுகின்றேன்..

நேர்வகிடின் சற்றே கீழிறங்க
அண்ணாசாலையின் 
அரை ஏக்கர் போல
மதிப்பினில் பரந்த நெற்றியோ ?

காந்தத்தையும் , காதலையும்
கலவையாய் கொண்ட
கொள்ளை குளிர் கண்களோ ?

முகம் அதன் மொத்த
தேவதை அம்சங்களையும்
முந்தி, முதலழகாய்
முதலிடம் பிடிக்கும்
 உன் மொழு மொழு மூக்கோ ?

அகத்தின் அழகிற்கு முகமே பொறுப்பு
அது போல
உன் முகத்தின் அழகிற்கு
மூக்கே
முழு முதற் பொறுப்போ ??

கவ்வியே தூக்கிடும் கவின்மிகு
வாத்து போல எழிலினில் ஒத்த
கவ்விட முடியா ,குட்டை கழுத்தோ ??

சிறு வெடியாய் வெடித்து
சிதறிடும் குலுக் சிரிப்பின், சிறப்பை
கூடுதல் சிறப்பாக்கும் பொருட்டு 
முன்கூட்டியே வெளிப்படும்
மூச்சின் குழந்தைகளோ ?

தேக்கிலான தேகத்தின்
வாக்கிலான பாகங்களிலெல்லாம்
அம்சமான அம்சங்களுடன்
அம்சமாய் அமைந்திருக்க

கோக்குமாக்கான கற்பனைவளத்துடன்
பிரம்மனை எண்ணத்தூண்டும்
ஓர் அங்கமதன் அபரிவிதமோ ?


நடுநிலைக்கருதியே ஈங்கு
நடுவராய் நான்  அழைக்கப்பட்டது  ,
என  நினைக்கின்றேன் ?

அப்பப்பா ! அப்பப்பா !
போதும்,போதும்

மிரட்டும் அவள் அழகினில்,
மிரண்டு, மயங்கி  படுநிலைக்கு
தள்ளப்பட்டது தான் மீதம் ....

உனக்காக வடித்த வரிகள் ....


உன் நினைவினில் நிதம் மூழ்கி
உனக்காக கவி பாட
வடிக்காத வார்த்தை தேடி
நடக்காத நடை நடந்து
கடக்காத நதி கடந்து
மடிக்காத வலை (வார்த்தை ) வீசி
பிடிக்காத பொன் வரிகளை பிடித்து
துடுக்கான  கவி படைத்த மமதையில்
மிடுக்காக நடை நடந்து வந்து
திடுக்கென உன்னிடம்  கவி பாடினால்
சொடுக்கிடும் நொடி பொழுதினில்
விடுக்கென நாண் ஏற்றிய அம்பு போல்
வெடுக்கென வெளிப்படும் பொழுது
கடிக்காத ஆப்பிள் போல கன்னங்கள்
கிடுக்கென சிவக்க செய்திடும்  நாணம்

உன் வெட்கத்தின் வெளிப்பாட்டாலோ ?
இல்லை, இதோ
நான் வடித்திருக்கும் கவி பட்டாலோ?

உறக்கமின்றி வாடி வடித்த மனதை
இரக்கமின்றி சாடுகின்றது
உனக்காக வடித்த வரிகள் .....

காரணம் தெரியவில்லை ...

உன் மீதிருக்கும் உயர் காதலோ ?
கவிதை வரிகளின் மீது
பனியாய்  படர்ந்திருந்த கோபமோ ?
உண்மை காரணம் என்னவென
உண்மையாக இதுவரை
தெரியவில்லை ,இருந்தும்
உன்னதமானவளே !
மீண்டும் உன் பார்வைக்கு
உனக்கே உனக்காக
என் வரிகள் ....

Saturday 27 April 2013

இனி இல்லை .....

உயிரே !
உயிரின் உயிரே !
உன் கண்களில் துளி
கண்ணீரை வரவைத்தது
க விதைகள்  தானெனில்
அவைகளுக்கு இனி
காற்றில்லை ,தண்ணீரில்லை
இவ்வளவேன்
மறதியின் மறதியிலும்
நினைக்கபோவதும் இல்லை  .

அவள் அழகின் பொருட்டு ...

ஒட்டுமொத்த கூட்டத்தையும்
தான்,தீர்கமாக கற்றிருந்த
வித்தையினால்
கற்றுத்தந்த எசமானனின்
அன்பினது ஆழம் பொருட்டு

வித்தைக்காட்டும்
குட்டிக்குரங்காய் ...

ஒட்டுமொத்த என் திறனை
கொட்டி வைக்கின்றேன்
வார்த்தைகளில்

"அல்லாவே " என
ஆச்சரியத்தில்  வாய்திறக்கும்
அவள் அழகின் பொருட்டு ...

நெடுந்தொடகள்.... ( சீரியல்கள் )

இரும்பின் நுனிக்கொண்டு - நரம்புகளை
பொத்தல் செய்திடாமல்

உடலுறுப்புகளில் ஒன்றில்கூட
சிறு அறுப்பும்  கொண்டிடாமல்

வகைவகை (மாத்திரை )வில்லைகள் விழுங்கிடும்
தொல்லைகள் ஏதும் அண்டிடாமல்

பக்கவிளைவுகள்  ஏதுமில்லா சித்த வைத்தியம்
போலேதும் இல்லாது
நம் கலாச்சாரத்திற்க்கு சீர்கெடுக்கும் பக்கா விளைவாய்
வீடுதேடி சீர்தூக்கிவரும், பித்தப்பைத்தியமாய்

கோபம், குரோதம் ,பகை, பொறாமை , துரோகம்
தகாவுறவென  பற்பல

கலாசார சீர்கேட்டை ,பேதைகளுக்கு போதைகளை
வீட்டிற்க்கே வந்து , விழி வழியே

மருந்தாய் தர துவங்கி , பின் விருந்தாய் விளங்கிடும்
கொடும் போதையின் பிரதிநிதிகளாய் ..
விரட்டியே,பின் தொடர்ந்திடும் பயங்கரம் ...

 நெடுந்தொடகள் ( சீரியல்கள் )

அகிம்சாவாதியாய்...

நேற்றுவரை.
கொடும்.தீவிரமான
தீவிரவாதியானவன்
அமைதியையே.அகமாக்கிக்கொண்ட
நின்.நிதர்சன.நினைவுகளால்
அகிம்சாவாதியாய்...

ஆட்சியும் நீயே , மாட்சியும் நீயே ,.

ஆட்சியும் நீயே  , மாட்சியும் நீயே  ,...

அழகே !
என் மனமெனும் மாளிகையின்
அந்தப்புரத்தினில் மட்டுமல்ல
திரும்பும் எந்தப்புறத்திலும்
ஆளுமை புரிந்திடும் ஆட்சியும்   நீயே
என் இதயதேசத்தின் மொத்தமுழு மாட்சியும் நீயே ....

விந்தையான அழகு !!

விந்தையான அழகு !!

என்னவளே,இனியவளே !
இதோ இதுநாள்வரையினில்
பொலிவின்றி, ஒற்றை ஒற்றையாய் பூத்து வந்த 
உன் வசிப்புப்பகுதி, பூங்காவின் பூக்கள்
சிலநாட்களாய், கற்றை கற்றையாய் கண்கவரும்படி
பரவசம்பூக்க பூத்துகுலுங்குதல் அறிவாயா?
வெளியூர் சென்றிருக்கும் நீ இல்லாத துணிவில்
குளிர்விட்டு போன தளிர்பூக்கள்,  துளிர்விட்டு
பூத்திருப்பது, விந்தையான அழகு தான்  ...

பிரிவினால்.பிறந்த.வலி(ரி)கள்.......


நீ இல்லா பொழுதுகளில் 
தடுமாறும் என் மனநிலை
கடும் தட்டுபாட்டில் தத்தளிக்கும்
தமிழக மின்சாரத்துறையை விட
படுமோசம் .....

***********************************
அமைதியாக தானே அமர்ந்து
என் நிலைபாட்டினை நிலைபடுத்துகின்றேன் ?
இருந்தும் ஏனோ ?
உன் நினைவுகள், என் மனதை
தடியடி , தண்ணீர் பீய்ச்சி அடித்தளை தாண்டி
துப்பாக்கிச்சூடு நடத்தி அட்டூழியம் செய்கிறது ???

***********************************
காலவரையற்ற   பதிப்பிடா  போராட்டத்தில் அமர்ந்தவனை
கலந்தாலோசித்து  பேச்சுவார்த்தை நடத்துவோமென, உன்
கவின் முகத்தை கையூட்டாய் காட்டிக்கொடுத்து
கள்ளத்தனமாய் என் போராட்டத்தை களைத்த
கல் நெஞ்சக்காரி நீ !

***********************************

ஓரிருநாள் பிரிவையையே
ஓர் யுகபோராட்டமாய்  கடந்திடும் பொழுது
சர்வசாதாரணமாய் , ஒரு வாரம் பிரிந்து செல்ல
உன் மனம் எப்படி சம்மதித்தது ??
ஓஹோ !
தமிழகத்தின் பெண்  நீ எனும் நினைப்பு தந்த
தாயுள்ள தவப்பரிசோ ??