Wednesday, 1 May 2013

காதல் கிறுக்கல்கள்...-1

என் தேவதை நீ அல்லவா ?
உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதைகள் எல்லாம் எல்லோராலும்
ரசிக்கபடுவதன் ரகசியம் சொல்கிறேன் , கேளடி கண்மணி !
என் ஒவ்வொரு கவிதையும் , ஒவ்வொரு வரிகளும்
ஒவ்வொரு வாக்கியமும்,.ஒவ்வொரு வார்த்தையும்,
ஏன் ஒவ்வொரு எழுத்தையும் , உயிர்க்கவிதையே !
உன்னைவிட அழகாய் படைக்க எண்ணி,
முனைந்தும் முடியாத தோல்வி கவிதைகளே !
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் மனதை மயக்கி மடக்கி வைத்திருக்கும்
    உன் மனம்கவர் மூக்கின் நுனியே ரசித்து எட்டி எட்டி பார்க்கும்
    இரு குட்டி திருக்குறள் உன் இதழ்கள்

    - இதழ்கள் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால்  மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு  சொல்லா?

இடை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொன் முத்து,பவளம் என மதிப்பினில்
பொலிவினில் உச்சமாய் இருப்பதை விட

உலகினிலி இதுவரை தோன்றிய வீரர்களின்
வீரத்தின் மிச்சமாய் இருப்பதை விட

தங்கம் கூட தரத்தினில் தோற்கும் ,தகதகக்கும்
அவள்தம் அங்கத்தின் அங்கமான
மச்சமாய் இருந்திட இச்சை எனக்கு ..

மச்சம்  
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

ஒரு முறையும் எனை தீண்டியதில்லை
ஒரு முறையும் தானும் தீண்டபட்டதில்லை
இருந்தும் , மனதால் ஒரு பெரும் ரகசியமஅறிவேன்
தரம் தனில் சிறந்த உன் கரம் அதன்
மென்மையில் முழுதாய் மயங்கி
மலர்களின் மொத்த இனமும் மடியேந்தும் ...

- கரம் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
முகம்பார்த்த மாத்திரமே  மனதோடு
முனுமுனுக்க துவங்கிவிட்டேன்
முத்து முத்தாய்  மலர்ந்திருக்கும் அந்த
 முகப்பருக்கள் மூன்றினை,  முறைத்தபடி
முத்தமிட கூடவும் முடியாத என்
முரட்டு இதழ்களுக்கு இல்லாத
முக்கியத்துவம், அதற்க்குமட்டுமா ??

 - முகப்பருக்கள் -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விரைவாய் வளர்ச்சியினை விரும்பும் வெகுவானோர் மத்தியில்
விதிவிலக்காய் ,வித்தியாசமாய் வாழ்நாள் முழுவதும்
மடியினிலும், மார்பினிலும் அன்பான அரவனைப்பினில்
இருந்திடவே விழைகின்றேன் என்றும்
என்றென்றும் என்னவளின் மழலையாய் ......

- மழலை 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
  என் மனதினில் உன் நினைவின் நிலைகள்
    ஆரம்ப நிலை ஆனந்தம்
    மத்திய நிலை அழகு
    ஆழ்நிலை பூரிப்பு
    இறுதி நிலை மட்டும் தவிப்பு

    - தவிப்பு -
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
  பக்தருக்கு இறைவனின் திருத்தலம்
    பிள்ளைகளுக்கு தாயின் திருவடி
    பெற்றோருக்கு பேதையின் வாய்மொழி
    போகிகளுக்கு போதையின் பாதை
    பசித்தவனுக்கு சோறு கண்ட இடம்
    கனவு காண்பவர்க்கு எண்ண கனவு
    இளையாராஜாவுக்கு நம்ம ஊரு
    யார் யார்க்கு எவ்வெவ்விடமோ
    அன்றும் , இன்றும், என்றும்
    என்றென்றும் எனக்கு உன் மடி

    - சொர்கம் - 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
தேடிபார்கின்றேன் என் பெயரை நானும்
முதலிலோ,நடுவிலோ ,முடிவிலோ என
எங்கேனும் ஓர் இடம்  தியாகிகளின் பட்டியலில்
அறிமுகம் ஆனா நாளாய் பெரும்பாலும்
தூக்கம்,கனவு,நினைவு,பசி,உணவு,உறக்கம்
என ஒவ்வொன்றாய் உனக்காய் தியாகம் செய்ததால்

தியாகம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடலையும் கடந்திடும் அளவிற்கு கண்களில்
கடுமையான கண்ணீர் துளி சிந்திட தயார்

போதாதெனில், உடலின் ஒட்டுமொத்த உதிரத்தையும்
ஒரு சொட்டும் மீதமின்றி கொட்டிட தயார்

பகரமாய் ஏதும் பெரிதாய் வேண்டாம் ..

அவள்தம் பட்டுமேனியில் சொட்டு சொட்டாய் பூக்கும்
வியர்வைதுளியாய் வைத்திடும் வரம் வேண்டும்!

வரம் தருவீரா ? பல கடவுள்களில் எவரேனும் ??

-வியர்வைத்துளி-

காலவோட்டத்தில்  கிட்டத்தட்ட  வழக்கத்திலிருந்து 
நீங்கி விட்டது எண்ணற்ற தமிழ் வார்த்தைகள்
அழகாய் அழகை குறிக்கும் வார்த்தை என்பதனால்
அவ்வார்த்தை தழைக்க வேண்டுமென வந்தாயோ ?
எழிலாய் .....

எழில் 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால்  மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு  சொல்லா?

இடை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
வெட்டவெளியில் உனக்காக மாத்திரம்
கொட்டிகொண்டிருக்கும் (ஐஸ்) கட்டி மழையை
ஆரத்தழுவி தேகத்தோடும்
மனதோடும்  கட்டிக்கொள்ளாமல்
பாத்திரமாய் காத்திருக்கும்  சித்திரமே
பத்திரமாய் காத்திரு உன்னவனின்
காதலுக்காக ......

வாழ்த்து !

   
   
   

ஹைக்கூ ...

கண்ணே !
எனக்குள்ளும் உனக்குள்ளும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிரப்பமாய் பிரகாசமாய்
காதல், காதலாய் நிறைந்திருப்பதால்
கனகாலமாய், கடுங்கோபமாய்
கால்கடுக்க காலம் பார்த்து
காத்துகிடக்கின்றது மோதல் .....

 - மோதல் - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அறிமுகம் ஆகிய அன்றிலிருந்து இதோ இன்றுவரை
அளவிற்க்கென நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட
அதிக ஆனந்தத்துடன்அளவலாவிடும்  ஆசைக்கு கிட்டாத
அதிசய அதிர்ஷ்டம் ,உன் வீட்டு அடுப்பாங்கரையினில்
அமைந்திருக்கும் சமையல் அடுப்பிர்க்கும் ,இரவினில்
அனுதினமும் தூக்கத்தில்,தழுவலுடன்  உன்பிடியில் இருக்கும்
அந்த தலையணைக்கும்  மட்டும் ....

  - அணைப்பு  -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பொக்கிஷமாய் கருதி போற்றப்படும்
பொன்னும், பொருளும் , ஏன் பொற்குவியல்களும்
பெறாத அரும் பெரும் பேறு (பாக்கியம் ) உன்னால்
பயன்படுத்தப்படும் எல்லா பொருளுக்கும் .
பூவினமே நாணும் பூவான உன் ஸ்பரிசம் பெறுவதால் ....

     - ஸ்பரிசம் 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பல நூறு மைல்கள் அப்பால் நீ இருக்கின்றாய்
இருந்தும் ,அங்கிருந்தே என் இதயம் அதை
கூரிய உன் கூர் நினைவம்பினால் குறிபார்க்காமலே
 கீறியும்,குத்தியும் செல்லும் வில் வித்தையினை
மொத்தமாக எங்கு கற்றாய் என்பது தான்
இதோ இந்த நிமிடம் வரை வீற்றிக்குக்கும், விந்தை

  - விந்தை - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மலைமகள்  தன் மடிதவழவேண்டியவள்
மண்ணிலா என மனம் கசிந்து  வடித்திடும்
கண்ணீர் குவியல்கள்

 - அருவி -

உன்னோடு ஒப்பிடப்படவேண்டி மலைமகள்
கனகாலமாய் எடுத்துக்கொண்டிருக்கும்
குளியலின் சிதறல்கள்

 - அருவி -

குளித்து  முடித்ததும் கொண்டை அவிழ்த்து
வெயிலினில் உலர்ந்திட விட்டிருக்கும்
மலைமகளின் தண்ணீர் கூந்தலோ ??

 - அருவி -

வசீகரிக்கும் வரிகளால் உன்னை, வசம் வைத்திருக்கும்
எனக்கு போட்டியாய்,மலைமகள்
அனுப்பும் தண்ணீர் கவிதைகள் 

 - அருவி -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கண்ணே , நம் காவியக்காதலுக்கு
 நினைவுச்சின்னமாய்  இருந்திட கண்ணயராது
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை

 - கற்பனை  -

கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு

 - கற்பனை - 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
 
பொதுவாக ஏதேதோ பெயர், பொருள் கொண்டாலும்
எனக்கென்னவோ ,உன்னால் ரசிக்கபடுவதனால் தான்
வான் நிலவு , தேன் நிலவாய் ....

 - தேன் நிலவு  -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உன்னோடு தொடர்பில் இல்லாத பொழுதுகளில்
என் மனதிற்க்கும், அவையங்களுக்கும் நான் சொல்லும் சமாதனம்  கண்டு
இதோ உலக சமாதானத்திற்கான விருதுப்பட்டியலில் என் பெயர்

  - சமாதானம் -
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^6
விடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்
தளிரே ,உன் குளிர் நினைவின் துணைகொண்டே
தொடங்குகிறது "காதல் " தொடர்பயணமாய் ....

 - பயணம் -  
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறக்கம் என்பது இம்மி அளவும் இல்லாத இதயம் கொண்டவன் என்றும்
இடி இடித்தேனும் , வெடிவைத்தேனும் தகர்த்தாலாவது
போடியாலவேய்நும் இறக்கம் பிறக்காத என்பவளே , என்னவளே !

கடைசியாய் காலையில் பேசியபோதும் , அழைப்பை துண்டிக்கும்
அவசரத்திலும் அந்த கடைசி நொடியினில் வெளியான உன் சுவாசத்தில்
சிக்குண்டு சின்னாபின்னமாகி சிதைந்துப்போன  என் இதய துகள்களை கேள்
ஒவ்வொருதுகளும்  சொல்லும் உன் இனிமையையும் , தன் நிலைமையையும்

- இதய நிலை -  
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^66
 உன் மீதான உன்னதமான காதலினை
முதல் முதலாய்  நான் பகிர்ந்துகொண்ட
என் உயிருக்கு உயிரான உற்ற நண்பன்

   - காகிதம் -
 
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^6
வறுமையின் சிறுமையினால் சிலசமயமும்
வேலைபளூவின் பளுவினால் பல பொழுதும் 
கடும் உணவுப்பசியை உணர்ந்ததுண்டு
இன்று உணவுப்பசியும், உணர்வே இல்லாமல்
உணர்வுப்பசியின் உள்ளிருப்பு போராட்டமோ ??
 
   

Monday, 29 April 2013

கைப்பேசி

காலகாலமாய் என் கனவுபகுதியினில் அடிக்கடி
குடியிருந்ததை  அறிந்ததும் நான் கொண்ட
வயிற்றெரிச்சலின் வெளிப்பாட்டினால் தொலைந்ததோ ...

  - கைப்பேசி -


கடவுளையும் கடவுளின் படைப்பான மனதனையும் கூட
கைகள் கூப்பி கும்பிடாதவன் உன்னால்  கைகூப்பி
கும்பிடுகின்றேன்  மனிதனின் படைப்பான கைப்பேசியை ...

  - கைப்பேசி -

காலம் -

ஆசை என் ஆசையும் ஒர் நாள்  நிறைவேறும்
எனும் நம்பிக்கை விதைக்கு தண்ணீர் பாய்ச்சுவது
நம் காதலுக்கு அடுத்தபடியாய் காலம் தான்

 - காலம் -


 என் காதலும் ஒர் நாள் கைகூடும்
எனும் நம்பிக்கை மழையினை இந்நாள்வரை
எனக்காய் தூவிடும் ஒரே நண்பன் 

  - காலம் -

உருக்கம்

ஊருக்கு  ஒளிகொடுக்க
தன்னை தீயிட்டுக்கொண்ட மெழுகுவர்த்தி

ஆதவன் அவன் தன் அனல்தகிக்கும்
ஆதங்க பார்வைப்பட்ட பனிப்பாறை 

அடியில் அக்கினி தீமூட்டி பின்
பயன்பாட்டிற்க்கு எடுக்கப்படும்  தார்

தொழிற்ச்சாலையினில் புதியதாய்
பரிணாம பிறப்பெடுக்கும்  இரும்பு

இவை அனைத்தும்  அச்சச்சோ என
பரிதாபத்துடனும் ,ஏக்கத்துடனும்  பார்கின்றது

அனுதினமும் அழகான   உன் நினைவால்
அணுவணுவாய் உருகிடும்

இந்த அப்பாவி ஆசையின்  மனதை  கண்டு ...

   - உருக்கம் -

நான் பொல்லாதவன் ..

நேற்றிரவு கொடுங்கோவத்தில்,ஒரு கடுங்கலவரம்
அடித்து,உதைத்து,குத்தி,கிழித்து
பஞ்சு பஞ்சாக்கிவிட்டேன்,
நிதமும் நெஞ்சணைத்து நீ தூங்கும்
தலையணையை
என்  கனவினில் ..........
 
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((9
முரண்பாட்டு மூட்டை.....
 
முகமறிந்த, அறியா, பெரியவர்,சிறியவரென  பாகுபாடின்றி
பாசமாய், நீங்க,வாங்க,போங்க என்றழைத்து
என்னைமட்டும்  நீ, வாடா,போடா, எனும் அவள் ....


முரண்பாட்டு மூட்டை ...
 

காதல் கிறுக்கல்கள்..

தானே புயலுக்கே தளராமல் நடந்தவன்
தட்டுத்தடுமாறி தடம் தவருகின்றேன்
நீ ஆசுவாசப்படுகையில்
சிறுபுயலாய் வெளிப்படும் உன் சுவாசத்தில்

  உன் சுவாசத்தில்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
 
கார்த்திகை  மாத முதல் மழையின்
முதல் துளி  மண்மகளை தொட்டதும்
பட்டுமேனி சிலிர்க்க, சிலிர்த்து வெளிப்பட்ட
வெளிப்ப்பாடாய், வெளிப்படும் மனம்கவர்
மண்வாசனை விட மகத்தானது அடியே
எனை மயக்கும் உன்வாசனை ....

 மண்வாசனை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"எத்தனைக்கோடி இன்பம்வைத்தாய் இறைவா "
இறைநம்பிக்கை இல்லாதவரும் இசைந்து போகும்
இனிய தத்துவம் இது , காதலினால் .
ஆதலினால் காதல் செய்வோம் !!!!
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிரிக்கச்சிரிக்க பேசும் உன்னை - என்
வார்த்தை வசீகரத்தால் வசியப்படுத்தி 
எதிர் தாக்குதலுக்கு  தயாராகாது
தடுத்து வைத்திருக்கும் தருணங்களில்
எனை வீழ்த்திட நீ பயன்படுத்தும்
பிரம்ம அஸ்த்திரமோ, உன் மௌனம் ??

              மௌனம் 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
என்னவளே , கதகதப்பிர்க்காக என்னுள்
நீ கொளுத்திய சின்னஞ்சிறு தீ
இதோ, இன்று காட்டுத்தீயாய் ....

கவிதை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
மழையாய் , உன் கொஞ்சும் குரலின்
கொல்லும் நினைவுகள் பொழிய
மழைநீர் சேகரிக்கும் தொட்டியாய் ...
 
என் மனம்.......
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
காதல் உணர்வுபூர்வமானது என்பதை
உணர்த்திடத்தானோ ? அன்பே
இன்றுவரை நாம் சந்திக்காமலே .....
 
 
*******
தமிழ் அகராதியில் இனிமைக்கென
பொருளாய், புதியதாய் இணைக்கப்பட்ட
வார்த்தை ....
 
உன் குரல் ... 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றிலிருந்து இரண்டுநாட்கள் -என்
இதயம் வெறும் துடிக்கும் வேலை மட்டும் பார்க்கும்
இளைப்பாறுதலுக்காக சிறு இடைவேளையாய்-என்
இதயத்தின் இனிய உரிமையாளினி
இன்பச்சுற்றுலா சென்றிருக்கின்றாள்
இடம் -
 
 சொர்க்கம்  
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குவிழ்ந்த நிலையிலும் கூட
இரு   இதழ்கள்,
பாடும் ,இனிக்கும் சப்த ஸ்வரம் ...

முத்தம் 
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
 
 சர்ச்சைக்குரிய சிரிப்பு ,சிலிர்ப்பு ,முக்கல்,முனகல்களே
சராசரி சப்தங்களாய் செவிமடுக்கும் பொழுது
சர்வ சாதாரணமாய் வெளிப்படும் உன் சின்னஞ்சிறு
குலுக் சிரிப்பு ,தும்மல்,முக்கல்,முனகல்,மட்டுமின்றி
ஆசுவாசபடுகையில் சிறு புயலாய் வெளிப்படும்  சுவாசமும்
உன் கெஞ்சல்களின் முடிவிடபட்ட முடிவுரையும்
என் கொஞ்சல்களின் முத்தாய்ப்பு முன்னுரையுமான
உன் வெள்ளி விசும்பல்கள் என சப்தங்கள்
அத்தனையும் எனக்கு ,மோகக்கூவல்களாய்
மாறி தோன்றிடும் மாயம் எங்கனம்

- மாயம் -